ஈரான்- அமெரிக்கா இடையிலான அடுத்த அணு ஆயுத பேச்சுவார்த்தை ரோமில்

#America #Iran #Nuclear #Rome
Prasu
4 hours ago
ஈரான்- அமெரிக்கா இடையிலான அடுத்த அணு ஆயுத பேச்சுவார்த்தை ரோமில்

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. ஈரான்- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. 

இரண்டு முறை பேச்சுவார்த்தை ஓபன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. ரோமில் உள்ள தூதரகத்தில் ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெறும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாச்சி அராக்சி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துடன் ஆலோசனை நடத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உடனான ஒப்பந்தத்திற்கு உதவும்படி ஈரான் ரஷியாவிடம் உதவி கேட்டிருந்தது. அதற்கு ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746031212.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!