இந்தியா - பாகிஸ்தான் இடையில் அதிகரிக்கும் பதற்றம் : படைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கிய மோடி!
#India
#SriLanka
#Pakistan
#NarendraModi
#Kashmir
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
இது காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இருந்தது.
அதன்படி, எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை இந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாக, இந்திய அரசாங்கத்தின் உள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று புது தில்லியில் நடைபெற்ற சிறப்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் இந்த அனுமதியை வழங்கினார்.
இதில் இந்திய ராணுவத் தளபதிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



