உயிருள்ள 6000 புலம்பெயர்ந்தோரை உயிரிழந்ததாக அறிவித்த டிரம்ப்
#Death
#America
#migrants
#Trump
Prasu
6 months ago
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் சூழலில் உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டது. எனவே அவர்கள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை.
தற்போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட வெவ்வேறு நாட்டை சேர்ந்த 6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள குடியேறிகள், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்.
தற்போது அவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள்.
இறந்தவர்களாக கருதப்பட்டு அவர்களின் சமூகப் பாதுகாப்பு எண்களை ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் அமெரிக்காவில் வேலை செய்யவோ அல்லது சலுகைகளைப் பெறவோ முடியாது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
