மியன்மார் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்வு!
#SriLanka
#world_news
#Earthquake
#lanka4news
#Lanka4indianews
#LANKA4TAMILNEWS
Dhushanthini K
1 month ago

மியான்மரை நேற்று (28) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 1,670 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. நாட்டின் இராணுவ ஆட்சி இதை உறுதிப்படுத்தியுள்ளது.
மியான்மரின் பண்டைய தலைநகரான மண்டலேயை மையமாகக் கொண்டு, உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது.
இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான பின்னதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களின் வலிமை தாய்லாந்தின் அண்டை நகரமான பாங்காக்கிலும் உணரப்பட்டது.
இதன் விளைவாக, மியான்மர் மற்றும் பாங்காக்கில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




