அமெரிக்காவுடனான உறவுகள் முடிவிற்கு வந்ததாக அறிவித்த பிரதமர் மார்க் கார்னி
#Canada
#America
#relationship
Prasu
1 month ago

அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம் முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நமது பொருளாதாரங்களின் ஆழமான ஓருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகொண்ட இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு பழைய உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கார்வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவித்துள்ள அவர் அவை இரண்டு நாடுகளிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள உறவுகளை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



