ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் புகுந்த கார்
#Accident
#Road
#Germany
Prasu
1 month ago

ஜெர்மன் நகரமான முனிச்சில் மக்கள் கூட்டத்தில் கார் ஒன்று மோதியதில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மியூனிக் பாதுகாப்பு மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மியூனிக் தீயணைப்புப் படையினரை மேற்கோள் காட்டி, குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக செய்தி தளமான ஃபோகஸ் தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்று அது மேலும் கூறுகிறது.
அவசர சேவைகள் சுமார் 20 காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், ஆனால் எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறித்து தற்போது தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



