திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 95 பேர் மரணம்

#Death #people #Earthquake
Prasu
10 months ago
திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 95 பேர் மரணம்

திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. 

இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் திபெத் தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. 

இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது எனவும், 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!