சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு சென்ற உலக செஸ் சாம்பியன் குகேஷ்

#Cinema #Actor #sports #rajini kanth #Chess
Prasu
1 year ago
சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு சென்ற உலக செஸ் சாம்பியன் குகேஷ்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். 

இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. 

இதனை தொடர்ந்து குகேஷூக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் இச்சந்திப்பின்போது குகேஷிற்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அவர் வழங்கியுள்ளார். 

இதுதொடர்பான புகைப்படங்களை குகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!