விருச்சிக ராசியினர் போராடி வெற்றி பெறும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
விருச்சிக ராசியினர் போராடி வெற்றி பெறும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கோயில் வழிபட்டால் நன்மை காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பரணி: புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமானத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் அறிவாற்றலும் திறமையும் வெளிப்படும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரோகிணி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவுகளிடம் மதிப்பு உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். மனக்குழப்பம் விலகும். உங்கள் செயல் லாபமாகும். எல்லா நன்மைகளையும் அடைவீர்கள்.திருவாதிரை: இதுவரை உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த பிரச்னை விலகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

கடகம்

புனர்பூசம் 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வரும்.பூசம்: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான செயல் நடந்தேறும். திடீர் செலவு தோன்றும். ஆயில்யம்: வரவு செலவில் கவனம் செல்லும். மனக்குழப்பம் விலகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய நாள். வரவு அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும்.பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.உத்திரம் 1: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.

கன்னி

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.அஸ்தம்: பெரியோர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். சித்திரை 1,2: உங்கள் அணுகுமுறையால் ஒரு முயற்சி லாபமாகும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். நேற்றைய கனவு நனவாகும்.

துலாம்

சித்திரை 3,4: கோயில் வழிபாட்டில் தெளிவு பெறும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். சுவாதி: உங்கள் திறமையால் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். இழுபறியான வேலை நடக்கும் நாள்விசாகம் 1,2,3: உங்கள் வேலைகளை முடிப்பதற்காக வேகமாக செயல்படுவீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவதால் சங்கடம் விலகும்.அனுஷம்: வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது.கேட்டை: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு

மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திராடம் 1: நண்பர் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். முயற்சியில் வெற்றி காண்பீர். கூட்டுத்தொழில் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். உடல் நிலை சீராகும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.திருவோணம்: நினைத்ததை சாதிப்பீர். கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். முயற்சியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு வெற்றியாகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சதயம்: விழிப்புடன் செயல்படுவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடன் இருப்பவர்கள் செய்வார்கள். உங்கள் தேவைகளை அடைய கடுமையாக உழைப்பீர்.

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.ரேவதி: செயல் சாதகமாகும். நேற்றைய விருப்பம் இன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!