பிரான்ஸில் நடப்பு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியீட்டியது : ஒட்டுமொத்தமாக பதவிவிலகும் அமைச்சரவை!
#SriLanka
#France
Thamilini
1 year ago
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று (04) இடம்பெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற 288 வாக்குகள் தேவைப்பட்டதுடன், பிரேரணைக்கு ஆதரவாக 331 வாக்குகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்சில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிப்பெற்றதையடுத்து, பிரான்ஸ் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இன்று (05) இராஜினாமா செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த செப்டம்பரில் மைக்கேல் பார்னியரை பிரதமராக நியமித்தார், அவர் பிரான்சின் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தார்.