யாழில் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடங்கள் வெகு விமர்சை!

#SriLanka
Mayoorikka
1 year ago
யாழில் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடங்கள் வெகு விமர்சை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

 இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் அவரது பிறந்த வீட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டில் கேக் வெட்டி வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகின்றது.

images/content-image/2024/1732611250.jpg

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் ஊரவர்கள் இணைந்து இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். 


நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிப்பு!


images/content-image/2024/1732611357.jpg

 அத்துடன் தொடர்ந்தும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் பிரபாகரனின் வீட்டிற்கு வந்து கேக் வெட்டிக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். 

 மேலும் மரக் கன்றுகளும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மாணவர்களுக்கு பாடக் கொப்பிகளும் பரிசுப்   பொருட்களும் விநியோகிக்கப்பட்டது.

இதேவேளை மாவீரர் நாள் நினைவேந்தலிற்கு தடை இல்லை என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு இல்லாமல் மிகவும் சுதந்திரமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

 பொலிஸாரும் அவ்விடத்திற்கு வந்திருந்த நிலையில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4