பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு - 38 பேர் பலி
#Death
#Pakistan
#GunShoot
Prasu
11 months ago
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.