பிரேசில் ஜனாதிபதியை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

#India #PrimeMinister #Brazil #President
Prasu
11 months ago
பிரேசில் ஜனாதிபதியை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். 

அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்தார். இதோடு எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

நைஜீரியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வந்த பிரதமர் மோடி, இங்கு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "நாங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தோம்.

எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

19வது ஜி20 மாநாட்டை பிரேசில் நடத்துகிறது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!