பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி
#Attack
#Pakistan
#Terrorists
Prasu
11 months ago
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது.
இந்த கிளர்ச்சிக்குழு பொதுமக்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பலூசிஸ்தானின் கலட் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.