நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம் பெண் எம்.பி (காணொளி)

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த சம்பவம் உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் எனும் 22 வயதான இளம் எம்பி, தனது கன்னி உரையின் போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ஏசிடி கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




நியூசிலாந்தின் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம், மாவோரி மற்றும் மகுடத்திற்கு இடையேயான நியூசிலாந்தின் ஒப்பந்தத்தை தீவிரமாக மாற்ற முன்மொழியும் ஒரு சர்ச்சைக்குரிய மசோதா மீது நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் வெடித்தது.
— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) November 14, 2024
மரபு வழி போராட்ட முறை வீரியமாக உள்ளது, அவர்கள் அதை கைவிடவில்லை. pic.twitter.com/3AbmyfFlup