வரலாறு காணாத வெற்றியை எப்படி சாத்தியமாக்கியது என்பிபி!(லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

#SriLanka #Lanka4 #AnuraKumaraDissanayake #lanka4Media #lanka4_news
Mayoorikka
1 year ago
வரலாறு காணாத வெற்றியை எப்படி சாத்தியமாக்கியது என்பிபி!(லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி இலங்கையில் வரலாறு காணாத வெற்றியை என்பிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

 ஜேவிபி கட்சியினுடைய என் பி பி கட்சி என்று புதிதாக பெயர் சூட்டப்பட்ட ஜனநாயக வழியில் போராடுகின்ற ஒரு கட்சியாக ஜனாதிபதி தேர்தலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை விட பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெற்றிருக்கிறது இந்த வெற்றி எப்படி இது சாத்தியமானது

 நாம் ஆம் என் பி பி கட்சியினுடைய அலை வீசுவதற்கு காரணமாக இருந்த உதவி செய்தவர்களில் மக்களைத் தாண்டி அவர்களை எதிர்த்து நின்றவர்கள் என்று தான் கூற வேண்டும். அனைத்து கட்சிகளும் போட்டி போட்டன இறுதியிலேயே வெற்றி பெற்றவர்கள் பலர் தோல்வியை தழுவி கொண்டார்கள் சிலர் ஒரு சில இடங்களில் வெற்றியை பெற்றிருக்கிறார்கள் 

இருந்தாலும் அவர்கள் கடந்த காலங்களில் விட்டதவறுகளை மக்கள் என்பிபி கட்சியின் பிரச்சாரத்தின் ஊடாக அறிந்து கொண்டதும் ஒரு காரணமாக அமையலாம். அரஹலய போராட்டமே எபிபி கட்சி இதனுடைய வெற்றிக்கு ஆரம்பமாக மையமிட்டது. 

 இலங்கையிலே நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டமான கோத்தபாய மற்றும் ராஜபக்ஷ அவர்களுடைய குடும்பத்தை வெளியேற்றுவதற்கும் அவர்கள் காட்டிய அக்கறையும் அவர்கள் எடுத்துக் கொண்ட போராட்டமும் அந்த வெற்றியை வைத்துத்தான் இவர்களை இலங்கை மக்கள் ஏன் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் வரலாறு காணாத வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் ஒரு முறை ஜே ஆர் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தார்கள் இருந்தாலும் அதை தாண்டி பெரிய ஒரு வெற்றியை சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதற்கு காரணமாக இருந்தது இலங்கையின் பொருளாதார குழப்ப சூழ்நிலையும் கூட அதாவது இலங்கையில் இருக்கின்ற சூழ்நிலை வறுமை கடன் என்பது வேலைவாய்ப்பின்மை பிறநாட்டுக்கு வேலைக்காக அனைவரும் சென்று கொண்டிருப்பதை காரணம் காட்டி அதை வைத்து பிரச்ச்சாரம் செய்தமை அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

 ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் கூட அனுர தலைமையிலான கட்சியினர் அதிகளவான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். ஜேவிபி கட்சி என்று கேட்டிருந்தால் மக்களுக்கு சிறிய பயம் இருந்திருக்கும். 

ஆனால் என் பி பி கட்சி என்ற போர்வையிலே அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் ஜனநாயக வழியில் நாங்கள் போராட போகின்றோம் மக்களுக்காக என்று கூறியிருக்கிறார்கள் அதைவிட சில விடயங்களிலே சில போராட்டங்களிலே ஆர்ப்பாட்டங்களில் தங்களை நல்லவர்கள் என்று பாடுபடுகின்றவர்கள் மற்றும் மக்களுக்கானவர்கள் என்று எளிமையாக போராடி தங்களை முன்னிறுத்தி காட்டி இருக்கிறார்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

 அதைவிட ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பிற்பாடு பல விடயங்களை செய்து காட்டியிருக்கிறார்கள் பல ஊழல்களை தடுத்து இருக்கிறார்கள் பிடித்திருக்கிறார்கள் அதற்கான தண்டனையை கொடுத்திருக்கிறார்கள் 

அதே வேளையிலே போதைக்கான எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள் பல விடுபடாத தமிழ் மக்களுடைய காணிகளை விடுவித்து இருக்கிறார்கள் பாதையை திறந்து இருக்கிறார்கள் இப்படி பல விடயங்களை செய்திருக்கின்றார்கள். 

 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பிற்பாடு செய்த ஒரு சில விடயங்களும் தமிழ் பகுதி இஸ்லாமிய பகுதியிலேயும் கூட இவர்களுடைய அலை என்பதை விட ஒரு பேரலை வீசி அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4