எதிரிகளுக்கு எதிர்காலத்தில் கடும் பதிலடி கிடைக்கும் : ஈரான் எச்சரிக்கை!
#SriLanka
Dhushanthini K
6 months ago

ஈரான் மீது தாக்குதல் நடத்திய எதிரிகளுக்கு எதிர்காலத்தில் கடும் பதிலடி கிடைக்கும் என ஈரான் ஆன்மீக தலைவர் அயதுல்லா அல் கமேனி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பேன் என மீண்டும் வலியுறுத்திய ஈரானிய ஆன்மீக தலைவர், தமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக செயற்படும் அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய எதிர்ப்பாளர்களால் தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் கையகப்படுத்தப்பட்டதன் 45வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வின் போது அயதுல்லா அல் கமேனி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 4, 1979 இல், ஈரானிய எதிர்ப்பாளர்கள் 50 அமெரிக்க தூதரக ஊழியர்களை தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர், மேலும் ஈரான்-அமெரிக்க உறவுகள் நிலையானதாக இல்லை.



