உலகின் வலிமையான ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

#NorthKorea #Missile #Test
Prasu
6 months ago
உலகின் வலிமையான ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள வடகொரியா, இதனை “உலகின் வலிமையானது” என வர்ணித்துள்ளது.

குறித்த ஏவுகணையானது வட கொரியா சோதனை செய்த மற்ற ஆயுதங்களை விட அதிக மற்றும் நீண்ட தூரத்திற்கு பறந்துள்ளது.

அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கக்கூடிய செயல்படும் ICBMகளை வைத்திருப்பதற்கு வட கொரியா கடைசியாக எஞ்சியிருக்கும் சில தொழில்நுட்பத் தடைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது என்பதை இது புலப்படுத்துவதாக வெளிநாட்டு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் இந்த ஏவுகணையை “ஹ்வாசாங் -19” என்று அடையாளப்படுத்துகிறது. இது வட கொரியாவின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வட கொரியாவின் தீர்மானத்தின் வெளிப்பாடு என்றும் விவரிக்கப்படுகிறது.

 எவ்வாறாயினும் நடந்துவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் மேற்குலக நாடுகளை எச்சரிக்கும் ஒரு நிகழ்வாக சர்வதேச மட்டத்தில் இது பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!