பாகிஸ்தானில் வெடி குண்டு வெடித்ததில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

#Death #School #Pakistan #BombBlast
Prasu
6 months ago
பாகிஸ்தானில் வெடி குண்டு வெடித்ததில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.

இதில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

முதல் கட்ட விசாரணையில், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், ரிமோட் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை வாகனம் மற்றும் சில ஆட்டோக்கள் சேதமடைந்தன. குண்டு வெடிப்புக்கு காரணமானோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பலுசிஸ்தான் மாகாண முதல் மந்திரி சர்பராஸ் பக்டி பள்ளி மாணவர்கள் மீதான குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!