தீபாவளியன்று நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள்!

#SriLanka #DIwali
Dhushanthini K
1 month ago
தீபாவளியன்று நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள்!

தீப ஒளியிலே இறைவனை வழிபடக் கூடிய நாளாகவும், தீபங்களை வரிசையாக அடுக்கி ஏற்றி வைத்து வழிபடும் நாளாகவும், விரத நாளாகவும் முன்னோர்கள் நமக்கு கொண்டாட கற்றுக் கொடுத்த அழகான பண்டிகை நாள் இந்த தீபாவளி. 

இந்த ஆண்டு தீபாவளி கேதார கெளரி விரத நாளோடு இணைந்து வருவதால் சிவபெருமானை வழிபடும் நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகை 31ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் இது தொடர்பில் விரிவாக பார்ப்போம். 

இந்த வருடம் தீபாவளி பூஜையை காலை 4 மணி முதல் காலை 6 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி நாளில் பொழுது விடியும் முன்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிப்பது மிகவும் நல்லது. தலையில் நல்லெண்ணெய் வைத்து உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளித்து கங்கா ஸ்நான செய்வதால் தெய்வங்களின் அருள் எளிதில் கிடைக்கும்.

வீட்டின் பூஜை அறையில் படையல் போட்டு தீபாவளிக்கு தயாரித்த பலகாரங்களை வைத்து மண் விளக்குகளால் ஓம் வடிவம் உருவாக்கி அனைத்தையும் ஏற்றவும். 15 விளக்குகள் அல்லது 51 விளக்குகளை வைக்கவும். சிவபெருமானின் லிங்கம் இருந்தால் அபிஷேகம் செய்யுங்கள். 

இந்த நேரத்தில் மின் விளக்குகள் நிறுத்திவிட்டு அன்போடு இறைவனை வேண்டி வெளியே ஒருவரை பட்டாசு வெடிக்கச் சொல்லி தீபாவளி கொண்டாடவும். காலை 6 மணிக்குள் பூஜையை நிறைவு செய்யவும். தொழில் செய்யும் நபர்களுக்கு, நன்நாளிலும் தாமதமாக எழும் சோம்பேறிகளும் மற்றொரு நல்ல நேரத்தில் பூஜை செய்யலாம்.

 தீபாவளி பூஜை நேரம் : காலை 8 மணி முதல் காலை 9.30 மணி வரை

லட்சுமி குபேர பூஜை 

வீட்டில் செல்வம் பெருகிட, மகிழ்ச்சி ததும்ப, நல்ல விஷயங்கள் அரங்கேற தீபாவளி நாளில் நேரம் பார்த்து லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். தீபாவளிக்கு கறி எடுக்கும் பழக்கம் இருந்தால் லட்சுமி பூஜையை மறுநாள் கூட தொடரலாம். மாலை 4.29 மணிக்கு அமாவாசை தொடங்கி நவம்பர் 1ஆம் திகதி வரை அமாவாசை நீடிக்கிறது.

லட்சுமி குபேர பூஜை நேரம் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 6 - நவம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செய்ய வேண்டும். 

லட்சுமி குபேர பூஜை முறை

 மகாலட்சுமி, குபேரர் படத்தை எடுத்துக் கொள்ளவும். குறைந்தது 9 முதல் 108 ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து கொள்ளுங்கள். தாமரை மலர், அவல் கொண்டு செய்த பலகாரம் இருக்கட்டும். பலகை மீது கோலமிட்டு வடக்கு திசை பார்த்தபடி குபேரர் படத்தை வைத்திடுங்கள். குபேர யந்திரம் அருகில் இருக்கட்டும்.

 இப்போது வினை தீர்க்கும் விநாயகர், குலதெய்வத்தை முதலில் வழிபடுங்கள். அடுத்ததாக மகாலட்சுமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். நாணயங்களை ஒவ்வொன்றாக தாமரை இதழ்களில் எடுத்து மகாலட்சுமிக்கு முன் அடுக்கி மனமுகர்ந்து பிரார்த்தனை செய்து லட்சுமி மந்திரம் படிக்கவும். 

தீபாவளி வரலாறு, முக்கியத்துவம் 

இந்து புராணங்களின்படி தீபாவளி பண்டிகை தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை குறிக்கிறது. விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரமான ராமர் போரில் ராவணனை வீழ்த்தி அயோத்திக்கு திரும்பியதை அம்மக்கள் விளக்குகள் ஏற்றி, வீடுகளை அலங்கரித்து வாசலில் கோலமிட்டு தீபாவளியாக கொண்டாடினர். தென் இந்தியாவில் கிருஷ்ண பகவான் நரகாசூரனை கொன்றதை குறிக்கும் விதமாக தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!