யாழில் ணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்பு!
#SriLanka
#Jaffna
Mayoorikka
11 months ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவிவியுமே கொல்லப்பட்டுளனர். மாணிக்கம் சுப்பிரமணியம் 53, அவரது மனைவி மேரி 54 வயதுடைவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற கௌரவ நீதவான் நேரடியாக சம்பவ இடத்தை தற்போது பார்வையிட்டுக்கொண்டிருக்கின்றார்.