பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச!
#SriLanka
#Pakistan
Dhushanthini K
6 months ago

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சஹீர் அஹமட்டின் அழைப்பின் பேரில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, பிராந்தியத்தில் இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கு முதன்மையாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
இரு நாடுகளின் விமானப்படைகளின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



