வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு!
#SriLanka
#Arrest
Thamilini
1 year ago
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவாமி லீக்கின் பொதுச் செயலாளர் மற்றும் ஹசீனாவின் அரசியல் கட்சியின் மற்ற உயர்மட்டத் தலைவர்கள் உட்பட 45 பேருக்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஷேக் ஹசீனாவை நவம்பர் 18ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.