புளோரிடா சூறாவளி - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

#Death #America #people #Strom
Prasu
10 months ago
புளோரிடா சூறாவளி - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது. மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. 

அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது. அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தது.

இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த புயலால் ஏற்பட்ட தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!