ஜப்பானிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு

#prices #Japan #Nobel
Prasu
10 months ago
ஜப்பானிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு பிரிவிலும் நோபல் பரிசு வென்றவர்கள் யார்யார் என்ற அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. 

நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர் யார் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த வகையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடங்யோ என்ற அமைப்புக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 உலகில் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்ததற்காக நிஹோன் ஹிடங்யோ அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!