புளோரிடா மாகாணத்தை தாக்கிய மில்டன் புயலில் சிக்கி 9 பேர் பலி

#Death #America #people #Strom
Prasu
10 months ago
புளோரிடா மாகாணத்தை தாக்கிய மில்டன் புயலில் சிக்கி 9 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் ஹெலென் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழைக்கு அங்கு சுமார் 230 பேர் பலியாகினர். 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 

இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் அங்கு புதிய புயல் உருவானது. மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் புளோரிடா மாகாணம் தம்பா பகுதியில் கரையை கடந்தது அப்போது மணிக்கு சுமார் 260 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. 

இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன. மில்டன் புயல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் பந்தாடி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!