அமெரிக்க தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆப்கானிஸ்தானியர் கைது

#Election #Arrest #Afghanistan #America #President
Prasu
10 months ago
அமெரிக்க தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆப்கானிஸ்தானியர் கைது

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த நசீர் அகமத் தவ்ஹெடி (வயது 27) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு வந்தார். 

ஓக்லஹோமா நகரில் வசித்து வந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்த மாதம் நடக்கும் தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார். ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார். 

மேலும் மனைவி மற்றும் குழந்தையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார் என்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!