NPP இற்கு ஆதரவு வழங்கும் வாசுதேவ நாணயக்கார!
#SriLanka
Thamilini
1 year ago
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் படைக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
அக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இன்று (08.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி மலிமாவை ஆதரிக்கிறது. எங்கள் கட்சி போட்டியிடுகிறது.
தேசிய மக்கள் படையுடன் போட்டியிடுகிறோம். தேசிய மக்கள் படையுடன் உறவை உருவாக்கி இந்தத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட முயற்சித்தோம். ஜனாதிபதி தேர்தலில் கூட நாங்கள் அதை செய்ய முயற்சித்தோம்” எனக் கூறியுள்ளார்.