பாகிஸ்தானில் இம்ரான்கானை விடுவிக்க கோரி பேரணி
#Protest
#Pakistan
#ImranKhan
#release
Prasu
10 months ago

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். மோதல் காரணமாக இஸ்லாமாபாத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது.
இதற்கிடையே இம்ரான்கான தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



