குழந்தைகள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#children
Mayoorikka
1 year ago
இன்புளுவன்சா அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இந்த நாட்களில் அதிகம் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகள் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என சுகாதாரத் துறையினர் பெற்றோரிடம் கேட்கின்றனர்.
இதேவேளை, கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) உள்ள குழந்தைகளும் இந்நாட்களில் பதிவாகி வருவதாகவும், எனவே சரியான சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகிறார்.