பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன பேரணி!
#Protest
#world_news
#Pakistan
Mayoorikka
11 months ago

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண மக்கள் பயங்கரவாதம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன பேரணியை நடத்தியுள்ளனர்.
பிராந்தியத்தில் அரச ஆதரவு பயங்கரவாத குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றதாக Dawn செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் சமீபத்தில் கண்டனப் பேரணி நடைபெற்றதாகவும், இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம், போக்குவரத்து மற்றும் வர்த்தக சங்கங்கள், தனியார் பாடசாலைகள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



