யாழ்ப்பாணத்தில் 1 கோடி 8 லட்சம் ரூபா பணம் கொள்ளை

#SriLanka #Jaffna #Robbery #money
Prasu
1 year ago
யாழ்ப்பாணத்தில் 1 கோடி 8 லட்சம் ரூபா பணம் கொள்ளை

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றது.

குறித்த சங்குவேலி பகுதியில் உள்ள தனது காணியை விற்பனை செய்துவிட்டு 1 கோடி 8 இலட்சம் ரூபாவினை எடுத்துச் சென்றவேளை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பணத்தினை கொள்ளையடித்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4