அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞன் கனடாவில் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 weeks ago
அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞன் கனடாவில் கைது!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயதான முஹம்மது கான், புரூக்ளினில் வசிக்கும் யூதர்களைக் குறிவைத்து வெகுஜன துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டார்.

இது ஐஎஸ் அமைப்புக்கான ஆதரவின் வெளிப்பாடே என வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 7ஆம் திகதி பாரிய துப்பாக்கிச் சூடு நடத்துவதே குற்றம் சாட்டப்பட்ட இளைஞனின் திட்டம்.

தனக்கு உடந்தையாக இருந்தவர்கள் இரகசிய முகவர்கள் என்பதை அறியாத இளைஞன், இரண்டு இரகசிய புலனாய்வாளர்களுடன் சேர்ந்து தாக்குதலைத் திட்டமிட்டிருந்தான்.

இந்த இரகசிய முகவர்களிடம் தான் முஹம்மது கான் தாக்குதலுக்கான ஆயுதங்கள் வாங்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.  மேலும் யூத பெரும்பான்மையினர் புரூக்ளினை குறிவைக்க காரணமாக இருந்தனர்.

அதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி மனித கடத்தல்காரர் ஊடாக மூன்று வெவ்வேறு கார்களை பயன்படுத்தி கனேடிய எல்லை ஊடாக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகம் மற்றும் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!