பிரான்ஸ் அரசியல் நெருக்கடி : இடதுசாரி கூட்டணியில் இருந்து புதிய பிரதமர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
பிரான்ஸ் அரசியல் நெருக்கடி : இடதுசாரி கூட்டணியில் இருந்து புதிய பிரதமர்!


நாட்டின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இடதுசாரி கூட்டணியில் இருந்து பிரதமர் அறிவிக்கப்படமாட்டார் என ஜனாதிபதி மக்ரோன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

நான்கு இடதுசாரி கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை அமைத்து பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றிருந்தது. அதன் பின்னர் அவர்களுக்குள் கலந்துரையாடி பிரதமராக Lucie Castets என்பவரை பிரதமராக முன் மொழிந்தனர். இது தொடர்பாக எலிசே மாளிகையில் மக்ரோனுடன் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

இந்நிலையில், அக்கூட்டணியில் இருந்து பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவதை மக்ரோன் விரும்பவில்லை. அவர்களது கோரிக்கையை மக்ரோன் மறுத்துள்ளார்.

அதை அடுத்து மக்ரோனின் இந்த நிராகரிப்பு எதிராக வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.