சூடானில் கனமழையால் உடைந்த அணை : 60இற்கும் மேற்பட்டோர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சூடானில் கனமழையால் உடைந்த அணை : 60இற்கும் மேற்பட்டோர் பலி!

சூடானில் கனமழைக்கு இடையே அணை உடைந்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும், குறித்த பகுதியில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 மோதல்கள் நிறைந்த நாடாகக் கருதப்படும் சூடானின் இராணுவ அரசாங்கம் செயல்படும் கடற்கரை நகரமான "போர்ட் சூடான்" இற்கு  நீர்த்தேக்கம் தண்ணீர் வழங்குகிறது.  

அரபுத் தடுப்பணை உடைந்ததால், பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், சில பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!