ஜெர்மனியில் ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட தீ விபத்து

#Accident #fire #Germany
Prasu
1 year ago
ஜெர்மனியில் ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட தீ விபத்து

ஜெர்மனியின் லேப்சிக் பகுதியில் உள்ள ஸ்டார்ம்தாலர் ஏரியின் அருகே நேற்று இரவு பிரம்மாண்ட இசைத்திருவிழா நடைபெற்றது. 

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த இசைத்திருவிழாவில் ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், அங்கிருந்த ராட்சத ராட்டினத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதே சமயம், இந்த சம்பவத்தில் 23 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4