தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ள ஜப்பானியப் பிரதமர்
#PrimeMinister
#Resign
#Japan
#parties
Prasu
1 year ago
ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா, ஜப்பானின் ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து வரும் செப்டம்பர் மாதம் விலக இருப்பதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டது.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியன்று ஜப்பானின் பிரதமராக கிஷிடா பதவி ஏற்றார்.
அவரது பதவி காலத்தில் விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மக்களின் ஆதரவு குறைந்துள்ள நிலையில், கட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கிஷிடா முடிவெடுத்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
“ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
புதிய எல்டிபியை பொதுமக்களுக்கு தெளிவான முறையில் வழங்குவது அவசியம்” என்று கிஷிடா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.