ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சுவிஸ் வீராங்கனை

#Player #Swiss #Medals #Olympics #Paris
Prasu
1 year ago
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சுவிஸ் வீராங்கனை

சுவிட்சர்லாந்து, ஒலிம்பிக் போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரரான Audrey Gogniat, சுவிட்சர்லாந்துக்கு தனது முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.

அவர், 10 மீற்றர் air rifle வகை துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். அந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றவர், தென்கொரியாவின் Hyojin Ban.

வெள்ளிப்பதக்கத்தை வென்றவர், சீனாவின் Yuting Huang. வெண்கலப் பதக்கம் வென்ற Audrey Gogniat, எனக்கு வார்த்தைகளே வரவில்லை, சுவிட்சர்லாந்துக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளேன். 

எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்றவர்களைவிட, வெண்கலம் வென்றவர்கள் ஏதாவது ஒரு பதக்கமாவது வென்று விட்டோமே என தங்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இரட்டையர் டைவிங் போட்டியில், வெண்கலத்தை அவுஸ்திரேலியா நழுவவிட, அந்தப் பதக்கம் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தது.

 பிரித்தானிய அணியினர் வெண்கலம் வென்றதற்தே கண்ணீர் விட்டதைக் காட்டும் காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4