கனடா-நோர்த் யோக்கில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

#Death #Canada #GunShoot
Prasu
1 year ago
கனடா-நோர்த் யோக்கில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நோர்த் யோக்கில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான நபர் ஒருவரே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஸ்வானெ பூங்காவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தொடர்பில் பிரதேச மக்கள் போலீசாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததாகவும் அவரை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 23 வயதான மார்ஷல் பிரைன் என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!