TNPL வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்

#India #Death #Cricket #Youngster
Prasu
1 year ago
TNPL வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்

கிண்டி அருகிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

இன்று தனது வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் கிரிக்கெட் வீரர் எனவும், டி.என்.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகின.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4