விருச்சிக ராசியினருக்கு வாகனப் பயணத்தில் கவனம் அவசியம் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
விருச்சிக ராசியினருக்கு வாகனப் பயணத்தில் கவனம் அவசியம் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சி லாபமாகும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். நெருக்கடி அதிகரிக்கும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். உங்கள் செயலில் லாபம் காண்பீர். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.ரோகிணி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். உதவி புரிவதாக சொன்னவர் ஏமாற்றம் தருவர்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும்.திருவாதிரை: யோசிக்காமல் செய்யும் வேலையில் வருமானம் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். உடல்நிலையில் சங்கடம் தோன்றி மறையும். 

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கமான செயலிலும் பொறுமை மிக அவசியம்.பூசம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சலசலப்பு தோன்றும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. 

சிம்மம்

மகம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.பூரம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.உத்திரம் 1: பழைய கடன் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். போட்டியாளர் விலகுவர். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: மற்றவரிடம் ஒப்படைத்த வேலை இழுபறியாகும். தேவையற்ற பிரச்னையை தேடிச் செல்லாதீர்.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும். 

துலாம்

சித்திரை 3,4: தெய்வ அருளால் நினைத்த செயல் நினைத்தபடி நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.சுவாதி: தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடருவீர். உங்கள் முயற்சி லாபமாகும். செல்வாக்கு உயரும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் குழப்பம் அடையாதீர். போட்டியாளரால் சங்கடப்படுவீர். 

விருச்சிகம்

விசாகம் 4: பிரச்னை தேடிவரும். என்பதால் உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.அனுஷம்: நெருக்கடி விலகும். மனதில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.கேட்டை: வாகனப் பயணத்தில் கவனம் அவசியம். உங்கள் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். 

தனுசு

மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூராடம்: அலுவலகத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உங்களுக்கு எதிராக சிலர் சதி புரிவர்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் தோன்றும். தடைப்பட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்குவீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடு தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.திருவோணம்: உங்கள் அலட்சியத்தால் இன்று சங்கடங்களை சந்திப்பீர். எதிர்பாராத பிரச்னை ஏற்படும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வரவு திருப்தி தரும். 

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். நெருக்கடி நீங்கும்.சதயம்: சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மகிழ்ச்சியான நாள்.பூரட்டாதி 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். 

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். திட்டமிட்டிருந்த வேலைகளும் தள்ளிப் போகும்.உத்திரட்டாதி: உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். அலுவலகப் பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: வியாபாரத்தில் சில சங்கடம் தோன்றும். வேலைபளு உண்டாகும். கவனமுடன் செயல்படுவது நல்லது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!