சகோதரிகளின் கணவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 12 வயது சிறுமி

#SriLanka #Arrest #Sexual Abuse #Girl
Prasu
1 year ago
சகோதரிகளின் கணவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 12 வயது சிறுமி

மாத்தளை பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர்களான சகோதரிகளின் இரண்டு கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு சகோதரிகளின் கணவர்களினால் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மாத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சிறுமி தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் 12 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து, சந்தேக நபர்களான சிறுமியின் இரண்டு சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!