சிம்ம ராசியினர் கவனமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
சிம்ம ராசியினர் கவனமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். பரணி: கோயில் வழிபாட்டால் நலம்காணும் நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருவாயில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி நிறைவேறும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வாகனப் பயணத்திலும் இயந்திர இயக்கத்திலும் எச்சரிக்கை அவசியம். மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடைகள் உண்டானாலும் உங்கள் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும். வழிபாடு நன்மை தரும். திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பூசம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். வழிபாடு சங்கடம் போக்கும். ஆயில்யம்: எதிர்பார்த்த பணம் இன்று வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்ப்புகள் விலகும்.

சிம்மம்

மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பூரம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். உத்திரம் 1: தடைகள் விலகும். புத்தி சாலித்தனத்துடன் நினைத்ததை செய்து முடித்து ஆதாயம் காண்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: தாய்வழியில் உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். உறவுகளால் சில பிரச்னைகள் தேடிவரும். மனம் ஓய்வை விரும்பும். சித்திரை 1,2: நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் வீண் பிரச்னைகள் உருவாகும். விசாகம் 1,2,3: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுஷம்: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். கேட்டை: உங்கள் தனித்திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உண்டான சங்கடம் தீரும்.

தனுசு

மூலம்: செயலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணத்தில் சங்கடங்களை சந்திப்பீர்கள். உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். திருவோணம்: எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும். அலைச்சலும் செலவும் ஏற்படும். அவிட்டம் 1,2: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும் நாள்.

கும்பம்

அவிட்டம் 3,4: திடீர் வரவால் சங்கடங்கள் நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனம் மகிழ்ச்சியடையும். சதயம்: வழிபாட்டால் தெளிவு காண வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்களுக்கு பகையாவார்கள். பூரட்டாதி 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும். உத்திரட்டாதி: எதிர்பாராத பிரச்னைகளால் மனம் சோர்வடையும். அக்கம் பக்கத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். ரேவதி: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள்.