ரிஷப ராசியினருக்கு கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
ரிஷப ராசியினருக்கு கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள் - ராசிபலன்

மேஷம்;

அசுவினி: உங்கள் விருப்பம் நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பரணி: உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பீர்கள். திட்டமிட்டிருந்த முயற்சியை ஒத்தி வைப்பீர்கள். கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உறவினர்களால் நன்மை உண்டாகும். ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். மிருகசீரிடம் 1,2: கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும். திருவாதிரை: உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: உறவினர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பூசம்: மக்கள் சேவையில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். செல்வாக்கு உயரும். ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். நீண்டநாள் விவகாரம் முடிவிற்கு வரும்.

சிம்மம்

மகம்: எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கின்படி செயல்படுவீர்கள். வழிபாட்டால் மனம் தெளிவாகும். பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். உடலிலும் மனதிலும் இருந்த சங்கடம் நீங்கும். உத்திரம் 1: குடும்பத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். அஸ்தம்: இழுபறியாக இருந்த செயல் பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சித்திரை 1,2: உங்கள் செயல் இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

சித்திரை 3,4: வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நன்மையாகும். சுவாதி: உங்கள் செயல்கள் நினைத்தபடியே நடந்தேறும். கோயில் வழிபாட்டில் மனம் செல்லும். விசாகம் 1,2,3: குடும்ப வகையில் திடீர் செலவுகள் தோன்றும். பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம் 4: உறவினர்கள் நீங்கள் எதிர்பார்த்த தகவலைக் கொண்டு வருவார்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். அனுஷம்: உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உங்கள் முயற்சி பலிதமாகும். பூராடம்: உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். நட்புகளிடம் தள்ளி நிற்பது நல்லது. உத்திராடம் 1: நீண்டநாள் கனவு இன்று நிறைவேறும். சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தெய்வ அருள் உண்டாகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். திருவோணம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள். நன்மையான நாள். அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட வேண்டிய நாள். கோயில் வழிபாட்டால் மனதில் இருந்த குழப்பம் விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம்: வெளியூர் பயணத்தால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பூரட்டாதி 1,2,3: பிறரது பிரச்னைகளில் தள்ளியிருப்பது நல்லது. யாருக்கும் இன்று முன்ஜாமீன் கொடுக்க வேண்டாம். 

மீனம்

பூரட்டாதி 4: நீங்கள் நினைத்ததற்கு மாறான நிகழ்வுகள் இன்று நடைபெறும். உறவுகளுடன் சங்கடம் உண்டாகும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி நிறைவேறும். ரேவதி: கோயில் வழிபாட்டால் நன்மை காண வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!