கொழும்பு - கண்டி நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
எனினும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று (08) இரவு 7.30 மணி முதல் நாளை (09.06) அதிகாலை 01 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையுடன் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான கற்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.