03ஆவது நாளாக தொடரும் ரயில் சாரதிகளின் போராட்டம் : ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்!

புகையிரத இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (09.06) தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தொழில் நடவடிக்கையை தொடங்கினர்.
5 ரயில் நிலையங்களில் இரண்டு ரயில் நிலையங்களின் சாரதிகள் மாத்திரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்ஜின் ரயில்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் செயலாளர் எஸ். ஆர். சி. எம்.சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்தும் நோக்கில் 21 பேரால் பணிப்புறக்கணிப்பு நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனை கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



