கனேடிய உயர்ஸ்தானிகரின் பங்குபற்றலில் இருதய சத்திரிசிகிச்சைக்கான உபகரணங்கள் யாழ் வைத்தியசாலைக்கு கையளிப்பு!

கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் அவர்களின் நிவாரண அமைப்பின் ஊடாக பெறப்பட்ட நிதியில் 25 மில்லியன் பெறுமதியான இருதய சத்திரிசிகிச்சை பிரிவுக்கானஉபகரணத் தொகுதி இன்று வைபவ ரீதியாக யாழ் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இவ்வைபவத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் கௌரவ எரிக் வோல்ஷ் வருகை தந்து சிறப்பித்ததோடு வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
மேலும் அவர் தன்னுடைய உரையில் தொடர்ந்தும் கனடாவில் உள்ள மக்கள் இங்கு உதவி செய்ய தான் ஊக்குவிப்பதாக கூறினர்.
செந்தில்குமார் தன்னுடைய உரையில் கடந்த 20 வருட காலமாக இலங்கையில் பல உதவிகளை செய்து வருவதாகவும் குறிப்பாக 100க்கும் மேற்பட்ட இருதய சத்திர சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்திருப்பதாகவும் கூறினார்.
வைத்திய நிபுணர் லக்ஸ்மன், செந்தில்குமாரனின் தொண்டு நடவடிக்கை மற்றும் நிதி சேகரிப்புகளை பாராட்டி வாழ்த்தினார்.
இருதய சத்திர சிகிச்சை நிபுணர் சிவசங்கர் கடந்த இரண்டு வருடங்களாக 300ற்கு மேற்பட்ட சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் அந்தக் குழுவில் கடமையாற்றும் அனைவரும் கடமைக்கு அப்பால் சத்திர சிகிச்சைகளுக்கு பெரிதும் உதவியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இருதய சத்திரசிகிச்சை பிரிவு விரிவாக்கத்திற்கு புதிய கட்டிட தொகுதி அவசியம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக பலர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.



