மக்களுக்காக உதவி செய்பவர்களினை சுயலாபங்களுக்காக குறை கூறும் ஊடகங்கள்

வடக்கு கிழக்கில் வாழும் வறுமையான மக்களுக்காக தனது வருமானத்தில் இருந்து ஏராளமான பணங்களினை நீண்ட காலமாக நன்கொடையாக வழங்கி வருகின்றார் சுவிற்சர்லாந்தை வதிவிடமாக கொண்ட யாழப்பாணத்தில் வாழ்ந்து வரும் தமிழர் தியாகி என்ற தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்.
இவர் யாழ்ப்பாணத்தில் ஒரு மிகப்பிரபல்யமான வணிக நிறுவனம் ஒறை நடாத்தி வருகின்றார். அந்த வணிக நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியினை வறிய மக்களுக்கு வழங்குவதற்கென ஒதுக்கி வைத்து மாதத்தில் ஒருமுறை வறிய மக்களுக்கு அழைப்பு விடுத்து அந்த நிகழ்வுக்கு வருபவர்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு தேவையான பண உதவிகளினை வழங்கி வருகின்றார்.
07-06-2024 வெள்ளிக்கிழமை அன்றும் இதே மாதிரியான ஒரு நிகழ்வு நடைபெற்றது, இந்த நிகழ்வுக்கு ஏராளமாந வறிய மக்கள் உதவிக்காக வந்திருந்தனர். அதில் வந்தவர்களுக்கு ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டன. உதிகளினை பெற்ற மக்களும் தியாகி அவர்களுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியாக சென்றனர்.
இந்த நிகழ்வின் இறுதியில் இதனை பொறுக்காத சில ஊடகங்கள் உழ் நுழைந்து தியாகி அவர்களிற்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்னர், இதை அறியாத தியாகி அவர்களும் தன்னை மறந்து ஒரு தவறான செயலை செய்து விட்டார்.
அந்த தவறு அவர் "பணத்தினை காலில் போட்டு மிரித்து விட்டார்" இதனை சதி வேலை செய்ய முற்பட்ட ஊடகங்களும் அதனை தமது வாய்ப்பாக கருதி செய்திகளாக வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உண்மை தெரியாத சமூக போராளிகள் என தம்மை கருதி கொள்ளும் "Tik Tok, Youtube, Facebook" சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுபவர்களும் தவறான கருத்துக்களை மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு மனிதன் இவ்வளவுகாலமும் நல்லதே செய்து வருவதை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு என்ன நடந்தது என்று தெரியாமல் ஒரு தப்பை மட்டுமே வைத்து அவர்களினை தப்பாக சித்தரிப்பது மிகவும் தவறான விடயமாகும்,
ஈழத்தில் வாழும் ஏழைகளிற்கு உதவி செய்வதற்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தினை வாங்கி விட்டு அதனை தாங்கள்தான் செய்வதாக காட்டியவர்களும், வாங்கிய பணத்தினை உரியவர்களிடம் கொண்டு சேர்க்காத எவ்வளவோ ஊடங்கள் இருப்பதினை யாரும் குறை கூறுவதில்லை, தட்டி கேட்பதும் இல்லை.
தன் பணத்தில் மக்களுக்காக உதவி செய்த ஒருவனின் தவறை உலகெங்கும் வாழும் தமிழர்களிற்கு தப்பான விடயமாக எடுத்துரைக்கும் ஊடகங்கள் இந்த மக்களுக்கு உதவுவார்களா?
தியாகி அவர்கள் செய்யும் உதவியினை நிறுத்தினால் அவரினால் பன்பெறும் மக்களின் நிலை என்ன?
ஊடகங்களின் சுயலாபங்களுக்காக சில தவறான செய்திகளினை வெளியிடுவதினாலேயே சில நல்ல உள்ளம் படைத்தவர்களும் உதவி செய்ய முன்வருவதில்லை தமிழர்கள் அனைவரும் குறைகூறுவதினையே தமது முதல் கடமையாக கொண்டு செயல்படுவதினை முதலில் நிறுத்த வேண்டும்.
தேவைப்படும் போது குறைகளினை கூறி நல்லவர்களினை உதசீனம் செய்துவிட்டு அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களினை புகழ் பாடுவதில் எந்த பிரயோசனமும் கிடையாது..
சிந்தித்து செயல்படுவோம்..



