11 தமிழ் மாணவர்கள் காணாமல் போன விவகாரம்: மனுவை விசாரிக்க ஐந்து நீதிபதி கள் அடங்கிய அமர்வு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannagoda.)வினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி கரன்னாகொட ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன(Nissanka Bandula Karunaratne) மற்றும் நீதியரசர் ஷஷி மகேந்திரன்(Shashi Mahendran )ஆகியோர் முன்னிலையில் நேற்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த ரிட் மனுவை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒன்றை நியமித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இந்த ரிட் மனு ஜூன் 25ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



