ஒன்றாரியோ அமைச்சரவைக்கு தெரிவான ஈழத் தமிழர்!
#SriLanka
#Canada
Mayoorikka
1 year ago
ஒன்றாரியோ அமைச்சரவையில் மாகாண வீட்டு வசதித்துறை இணை அமைச்சராக இலங்கை தமிழரான விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டார்.
அதாவது ஒன்றாரியோ முதல்வர் Doug Ford நேற்றைய தினம் தனது அமைச்சரவையில் பெரும் மாற்றங்களை செய்திருந்தார்.
இதில் விஜய் தணிகாசலத்திற்கு புதிய துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒன்றாரியோ மாகாண வீட்டு வசதித்துறை அமைச்சராக Paul Calandra பதவி வகிக்கிறார்.
முன்னதாக விஜய் தணிகாசலம், போக்குவரத்து இணை அமைச்சராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய அவரின் தலைமையில் சிறப்பாக செயல்பட தயாராக இருப்பதாக விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.